35 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கருப்பராயன் கோவிலில் திருவிழா..!

published 2 years ago

35 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கருப்பராயன் கோவிலில் திருவிழா..!

 

கோவை: கோவை மருதமலை சாலை முல்லை நகரை அடுத்த லிங்கேகவுண்டன் புதூர் பகுதியில் கருப்பராய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடக்கிறது.

கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம்  வெள்ளிங்கிரி மலையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அதைத் தொடர்ந்து  நேற்று காலை 4.30 மணி அளவில் லிங்கேகவுண்டர் புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மங்கல இசை நிகழ்ச்சியுடன் கருப்பராய சுவாமி குதிரை வாகனத்தில் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தார்.

தொடர்ந்து ஊர் பொதுமக்கள் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மகா அன்னதானம் நடைப்பெற்றது.

மாலை 4 மணிக்கு மாரியம்மன் கோவிலிருந்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தல் நடைப்பெற்றது. இரவு 7 மணிக்கு கருப்பராயசுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைப்பெற்றது. பழமையான இக்கோவிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe