தோசை இட்லி சாப்பிட்டு போர் அடிச்சிருச்சா- இத செஞ்சு பாருங்க...

published 2 years ago

தோசை இட்லி சாப்பிட்டு போர் அடிச்சிருச்சா- இத செஞ்சு பாருங்க...

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - தேவையான அளவு

வெங்காயம்- 2 தேக்கரண்டி

குடைமிளகாய்- 2 தேக்கரண்டி

தக்காளி- ஒரு தேக்கரண்டி

கேரட்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- ஒன்று

கொத்தமல்லி- ஒரு தேக்கரண்டி


செய்முறை:

முதலில் காய்கறிகளைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய பின் அனைத்து காய்கறிகளையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சுற்றி எண்ணெய் விட்டுக் கொள்ளவும்.

பிறகு ஒரு கரண்டி மாவு எடுத்துக் காய்ந்த தோசைக்கல்லில் ஊற்றி அதில் நறுக்கிய காய்கறிகளைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். தோசை மாவைத் மெலிதாகத் தேய்க்க வேண்டாம்.

ஒரு பக்கம் வெந்தவுடன் தோசையை திருப்பிப் போடவும்.

தோசை பொன் நிறமாக மாறியவுடன் எடுத்துவிடவும்.

சுவையான சத்தான காய்கறி ஊத்தாப்பம் தயார். இதைத் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அப்படியிருக்கும். ஒரு குவிக்கான டிஃபெரென்டான டிபன் இது…

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe