ஊட்டியில் வீடு புகுந்து நாயைக் கவ்விச் சென்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

published 2 years ago

ஊட்டியில் வீடு புகுந்து நாயைக் கவ்விச் சென்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்குக் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப நாட்களாகக் குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரைத் தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்துக் கிடந்த வளர்ப்பு நாயைச் சிறுத்தை அலேக்காக கவ்விச் சென்றது.

சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர், வளர்ப்பு நாயைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டிலிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளைச் சோதனை செய்ததில், நாயை, சிறுத்தை கவ்விச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தெரிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயைக் கவ்விச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,
"கடந்த 6 மாதமாகச் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. பலர் நேரிலும் பார்த்து உள்ளார். எனவே, கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த  நிலையில் ஊட்டி எச். பி. எப் பகுதியில் பசுமாட்டை, புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க, 4 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் எச். பி. எப். பகுதியில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe