பிரேக் பாஸ்ட்டுக்கு என்ன செய்யறதுனு யோசிகரீங்கலா...?! இதோ இன்னொரு ஆப்ஷன்...

published 2 years ago

பிரேக் பாஸ்ட்டுக்கு என்ன செய்யறதுனு யோசிகரீங்கலா...?! இதோ இன்னொரு ஆப்ஷன்...

தேவையான பொருட்கள்:

அரிசி : 1 கப்

சாமை அரிசி : 1 கப்

புடலங்காய் : 1

வெல்லம் : 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் : 4

துருவிய தேங்காய் : 1/4 கப்

சாதம் : ஒரு கைப்பிடி அளவு

சிறிய வெங்காயம் : 1/2 கப்

முருங்கைக் கீரை பொடி - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:

சாமை அரிசி மற்றும் சாதாரண அரிசியை நன்றாகக் கழுவி முதல் நாள் இரவு ஊறவைக்கவும்.

மறுநாள் காலையில் ஒரு மிக்சி ஜாரில், துண்டுகளாக நறுக்கிய புடலங்காய், வெல்லம், சீரகம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி வெங்காயம், முருங்கைக்கீரைப் பொடி, சமைத்த சாதம், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து மாவு பதத்துக்கு அரைக்கவும்.

அரைத்த மாவில் மீதமுள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

மாவைப் புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. அரைத்த உடனேயே தோசை செய்யலாம்.

சாமை அரிசியுடன் சாதாரண அரிசிக்குப் பதிலாகக் கவுனி அரிசி போன்ற பாரம்பரிய வகைகளையும் கூட சேர்க்கலாம். காலை பிரேக்பாஸ்ட்டுக்கு ஏற்ற சத்தான உணவு இது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe