கோவையில் 5 பேருக்கு குண்டாஸ்

published 2 years ago

கோவையில் 5 பேருக்கு குண்டாஸ்

கோவை: கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ரத்தினபுரி கண்ணப்பன் நகர் நாராயணசாமி லேஅவுட் வீதியைச் சேர்ந்த புள்ளி பிரவீன், கண்ணப்ப நகர்ப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத், சம்பத் வீதியைச் சேர்ந்த சூர்யா, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற கருப்பு சூர்யா ஆகிய 5 பேர் மீதும் ரத்தினபுரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, போக்சோ, என பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர்களால் பொது அமைதிக்குச் சீர்கேடு இருந்து வந்த காரணத்தினால், சிறையில் இருக்கும் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்திரவிட்டார். இதையடுத்து அந்த உத்தரவு நகல் சிறையில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர் அடிதடி வழக்கில் கைதாகி, தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்த நிலையில் மீண்டும் விதியை மீறித் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் ஒரு வருடத்திற்கு ஜாமின் கிடைக்காத 110 பிரிவின் கீழ் ஒரு வருடக் கட்டாய தண்டனையில் சிறையில் அடைக்கக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe