கோவையில் 3 புதிய மேம்பாலங்கள் : டிசம்பரில் பணிகள் தொடக்கம்

published 2 years ago

கோவையில் 3 புதிய மேம்பாலங்கள் : டிசம்பரில் பணிகள் தொடக்கம்

கோவை செய்திகளை அறிந்துகொள்ள எங்கள் வாட்ஸப் குழுவில் இணைந்திடுவீர் https://chat.whatsapp.com/GPiY4rVbwAz2cJQZ9IvC2g..

கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோா், அலுவலகங்களுக்கு செல்வோா், வாகன ஓட்டிகள் என அனைத்துத் தரப்பினரும் நாள்தோறும் அவதியடைந்து வருகின்றனா்.

மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க கோவை-திருச்சி சாலை ராமநாதபுரத்தில் ரூ.250 கோடி செலவில் 3 கிலோ மீட்டா் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டது.

மாநகரின் முக்கிய சாலையான அவினாசி சாலையில் விமான நிலையம், கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை அமைந்துள்ளன.

சேலம், ஈரோடு, திருப்பூா் என முக்கிய நகரங்களுக்குச் செல்லும் வழித்தடமாகவும் உள்ளதால், போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கிலோ மீட்டா் நீளத்தில் இங்கு பாலம் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் காளப்பட்டி சாலை சந்திப்பு, சிங்காநல்லூா், சாய்பாபாகாலனி என மேலும் 3 இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

காளப்பட்டி சாலை சந்திப்பில் இருந்து துடியலூா் சாலை சந்திப்பு வரை 1.40 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

சிங்காநல்லூா் உழவா் சந்தை முதல் ஜெய்சாந்தி தியேட்டர் வரை 2.40 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.140 கோடியே 80 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சாய்பாபா காலனி சந்திப்பில் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பில் 1.14 கிலோ மீட்டா் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

3 மேம்பாலங்களும் மொத்தம் ரூ.252 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த 3 மேம்பாலங்கள் அமைக்க அதிக அளவில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது. இப்பாலங்களின் கட்டுமானப் பணி டிசம்பா் மாதம் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe