பேரூர் பச்சாபாளையத்தில் முகாமிட்டிருந்த 7 காட்டு யானைகள் விரட்டியடிப்பு

published 2 years ago

பேரூர் பச்சாபாளையத்தில் முகாமிட்டிருந்த 7 காட்டு யானைகள் விரட்டியடிப்பு

கோவை:  கோவை பச்சாபாளையம் பகுதியில்  சோளக்காட்டுக்குள் 2 குட்டி யானைகளுடன்  முகாமிட்டிருந்த  7 காட்டு யானைகளை வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பேரூர் பகுதியில் யானைகள் அவ்வப்போது உலா வருவதும், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பச்சாபாளையம் அருகே உள்ள சோளக்காட்டுக்குள் ஏழு காட்டு யானைகள் நுழைந்தன.

சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சோளக்காட்டின் நடுவிலேயே யானைகள் முகாமிட்டிருந்தன. பகல் நேரத்தில் யானைகளை விரட்ட பெருமளவு முயற்சி எடுக்கப்படவில்லை.

இரண்டு குட்டிகளுடன் யானைகள் இருந்ததால் அவை ஆக்ரோஷமடைந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் நுழைந்து விடும் என்பதால் வனத்துறையினர் சற்று பொறுமை காத்தனர்.

இருப்பினும் யானைகள்  சோளக்காட்டை விட்டு வெளியேறி  குடியிருப்புகளுக்குள் நுழையாத வண்ணம் இருக்க வனத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து கண்காணிப்பை பலப்படுத்தினர்.

இதனை அடுத்து மாலையில் பட்டாசுகள் வெடித்தும், வித்தியாசமான ஒலிகளை எழுப்பியும் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியை முடுக்கினர். சுமார் 2 மணி நேரம் போக்கு காட்டிய யானைகள் மீண்டும் மீண்டும் சோளக்காட்டு பகுதிக்கு வந்து நின்றன.

குட்டிகளை காப்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்த யானைகள் அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்தி பிளிறின. அவ்வப்போது மண்ணை எடுத்து வாரி வீசியும் ஆக்ரோசத்தை யானைகள் வெளிப்படுத்தினர். மறுபடியும் யானைகள் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் வந்து விடாமல் காக்கும் வகையில் வனத்துறையினர் மூன்று திசைகளில் இருந்து பட்டாசுகளை எறிந்து யானைகளை அவை வந்த பாதையிலேயே திருப்பி அனுப்ப கடுமையாக போராடினர்.

இதனை அடுத்து நேற்று மாலை  சுமார் 6:30 மணி அளவில் இருள் சூழ்ந்த பிறகு வனத்துறையினர் மீண்டும் பட்டாசுகள் வெடித்து, நீண்ட தூரம் வெளிச்சம் கொடுக்கும்  டார்ச்சர் களை பயன்படுத்தி யானைகளை வழிநடத்தி வனத்திற்குள் விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe