கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்ற முதலமைச்சர்

published 2 years ago

கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்ற முதலமைச்சர்

கோவை: கோவை வந்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்  அண்மையில் காலமான கோவை தங்கம் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திண்டுக்கல் பகுதியில் உள்ள காந்திகிராம  பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்

மேலும், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் , ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

வரவேற்பின்போது, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், முத்துச்சாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து இரண்டு முறை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கத்தின் வீட்டிற்கு சென்றார். கோவை தங்கம் கடந்த 2021 மார்ச்சில்  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் திடிர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை தங்கம் கடந்த அக்-12 ஆம் தேதி காலமானார்.

இதனிடையே சாய்பாபாகாலணி பகுதியில் உள்ள கோவை தங்கம் வீட்டுற்கு சென்ற முதலமைச்சர் கோவை தங்கத்தின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து  கோவை தங்கத்தின் மனைவி, மகன், மகள் உள்ளிட்ட  உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe