குரூப்-1 தேர்வு : கோவையில் இன்று 49 மையங்களில்  நடைபெறுகிறது

published 2 years ago

குரூப்-1 தேர்வு : கோவையில் இன்று 49 மையங்களில்  நடைபெறுகிறது

கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்- 1 முதல்நிலை எழுத்துத் தேர்வானது கோவை யில் 49 மையங்களில் இன்று காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 15,081 பேர் தேர்வு எழுத உள்ளனர். 

இந்த தேர்வுக்காக கோவை மாவட்டத்தில் சப்- ஆட்சியர் நிலையில் 5 பறக்கும்படை அலுவலர்கள், 12 மொபைல் அலுவலர்கள், 49 தேர்வுக்கூட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்கு வர வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு, இடதுகைப் பெருவிரல் - ரேகையைப் பதிக்க வேண்டும். இவ்வாறு - செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் ஓ.எம்.ஆர். விடைத் தாளில் ஈ என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும். ஓ.எம்.ஆர் விடைத்தாளில் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்கப்பட வேண்டும். 

இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வு பெறும் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதனைக் கவனத்துடன் பிழையில்லாமல் சரியாக கருமையாக்கப்பட்டுள்ளதா உறுதி செய்து கொள்ளவேண்டும். இதனை செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். 

அதாவது 12.30 மணி முதல் 12.45 மணிவரை இந்த செயல்பாட்டினை செய்து முடித்து விடைத்தாளைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நம்ம ஊரு கனெக்‌ஷன்

உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்த செய்திக்குள் பதிவிடப்படும்...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe