கோவையில் பேருந்துகள் நிறுத்தம்: தனியார்- அரசு பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்...!

published 2 years ago

கோவையில் பேருந்துகள் நிறுத்தம்: தனியார்- அரசு பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்...!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE 

கோவை: கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அரசு பேருந்து ஓட்டுநரை அடித்ததாகக் கூறி அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் தனியார் பேருந்து (எண்: 45) உக்கடத்திலிருந்து காந்திபுரம் வழியாக வெள்ளமடை வரை செல்கிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உக்கடத்திலிருந்து புறப்பட்ட அந்த தனியார் பேருந்தை சந்தோஷ் என்பவர் ஓட்டினார். வெங்கடேஷ் என்பவர் ஓட்டுநராக இருந்துள்ளார்.

அந்த பேருந்து காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்திற்குள் உள்ளே செல்லும் பொழுது 3-ஹெச் என்ற இலக்கமிட்ட அரசுப்பேருந்து ஒன்று அந்த தனியார் பேருந்துக்கு வழி விடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் அவருடன் இருந்த வெங்கடேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றவே இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பானது. இதில் கார்த்திக் காயமடைந்தார். தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த நிலையில், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூவரையும் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த திடீர் போராட்டத்தால் காந்திபுரம் பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe