தப்பியோடிய ராஜபக்சே: கோவையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

published 2 years ago

தப்பியோடிய ராஜபக்சே: கோவையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE 

கோவை: இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், ராஜபக்சே செவ்வாய்க்கிழமை தனி ஹெலிகாப்டரில் ஏறித் தப்பியோடினார். இதனைக் கொண்டாடும் விதமாகக் கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் அவதியடைந்து வரும்  நிலையில் அங்கு போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திங்கட்கிழமை இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் அந்த நாட்டின் பிரதமராகயிருந்த மகிந்தா ராஜபக்சேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.  அவர் பிரதமர் பதவியிலிருந்தும் விலகினார்.

இதனிடையே மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி அவர் ராணுவ பாதுகாப்புடன் ஹெலிகாப்டரில் வேறு வீட்டிற்குத் தப்பியுள்ளார்.

இந்த சூழலில், ராஜபக்சே சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுவதைக் கொண்டாடும் விதமாகக் கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய முற்போக்கு அமைப்பினர் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "1.5 லட்சம் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டுள்ளார். சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுகிறார். இதனைக் கொண்டாடும் விதமாகவே பட்டாசுகள் வெடித்தோம்." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe