நீலகிரியில் பள்ளிகளில் 4 ஆயிரம் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் கயல்விழி தகவல்

published 2 years ago

நீலகிரியில் பள்ளிகளில் 4 ஆயிரம் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் கயல்விழி தகவல்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், பாலடாவில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தகவல் மையத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:
"தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 1.10 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 36 வகையான பழங்குடியினர் வாழ்ந்து வரும் நிலையில், தோடர், குறும்பார், கோத்தார், இருளார், அடயன் மற்றும் காட்டுநாயார் ஆகிய 6 வகையான பழங்குடி இனம் அழிவின் விளிப்பில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பழங்குடியினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை என்பது பிற சமூகத்தின் வளர்ச்சியை விடக் குறைவாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் 1.81 லட்சம் பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களின் கல்வியறிவு 54.5 சதவீதமாக உள்ளது. இதனை அதிகரிக்கத் தமிழகத்தில் உள்ள 120 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள், 8 ஏகலைவா பள்ளிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக, நடப்பு ஆண்டு 4 ஆயிரம் பழங்குடியினர் மாணவர்கள் புதிதாகப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்தப் பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.45.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதாகக் கண்டறியப்பட்ட நில உரிமை இழப்பு, வேலையின்மை, கலாச்சார மாற்றம், சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல், ஊட்டச்சத்துக் குறைபாடு, வனங்கள் அழிப்பால் மக்கள் இடம்பெயர்த்தல் போன்ற இன்னல்களைக் களைய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe