அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தங்க முயன்ற பெண்ணை யாரும் துன்புறுத்தவில்லை: கோவை ஜி. எச் டீன் விளக்கம்

published 2 years ago

அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தங்க முயன்ற பெண்ணை யாரும் துன்புறுத்தவில்லை: கோவை ஜி. எச் டீன் விளக்கம்

கோவை: கோவையில் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தங்க முயன்ற பெண்ணை இரவில் அடித்துத் துன்புறுத்தியதாக, ஆட்சியரிடம் புகார் அளித்தது தொடர்பாக, அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை காந்திமாநகர் ஹட்கோ காலனியைச் சேர்ந்தவர் கற்பகவள்ளி. அந்த பெண் இரவில் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தங்க முயன்றபோது, மருத்துவமனை ஊழியர்கள், அங்கு பணியிலிருந்த காவல்துறையினர் அனைவரும் தன்னை அடித்து விரட்டியதாக, ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கை: 
"கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுற்றியுள்ள 5, 6 மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலத்துக்கும் சேவை செய்கிற மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். தினமும், 5,000 முதல் 6,000 பேர் வரை வெளி நோயாளிகளாகவும், 2,000 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, இங்கு வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அதுபோலவே, குறிப்பிட்ட நாள் இரவு, அந்த நபர் சந்தேகத்துக்கு உரிய வகையில், மருத்துவமனை வளாகத்துக்குள் இருந்துள்ளார். எனவே, அவரை வெளியேறும்படி காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு அந்த நபர் அராஜகமாகப் பேசி, அத்துமீறிச் செயல்பட்டதால், காவலர்கள் அவரை வெளியேற்றினர்.

மற்றபடி, அந்த நபர் கூறியதுபோல, அவரை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. அந்தப் பெண் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe