மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பி. சி, எம். பி. சி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை: கோவை ஆட்சியர் தகவல்

published 2 years ago

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பி. சி, எம். பி. சி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை: கோவை ஆட்சியர் தகவல்

கோவை: மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி. சி), மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம். பி. சி) மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
"தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமலிருந்தால், கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, கல்வி உதவித்தொகைக்கு 2022-2023-ஆம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகலாம்.

மேலும், http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschems என்ற இணையதள முகவரியில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்து 'ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம், இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைப்பேசி எண்: 044-28551462' என்ற முகவரிக்கு வரும் 2023 ஜனவரி 30-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe