பள்ளிகளில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவது குறித்து கோவையில் மாநாடு

published 2 years ago

பள்ளிகளில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவது குறித்து கோவையில் மாநாடு

 

கோவை : பள்ளிகளில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவது, நவீன காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை வகுப்பது மற்றும் கல்வியை எளிமைப்படுத்துவது குறித்து கல்வியாளர்கள் கலந்து கொண்டு உச்சி மாநாடு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.

 

பள்ளி கல்வியில் புதுமைகள் புகுத்துவது தொடர்பான உச்சி மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பள்ளிகளில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது எப்படி? கல்வியை எளிமை ஆக்கும் வழிமுறைகள், பாடத்தை கற்பதால் மாணவர்களுக்கு கிடைக்கும் விளைவுகளை கண்டறிந்து அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட 3 அமர்வுகள் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை ராணுவ மையத்தின் (கோவை டெரியர்ஸ்) கமெண்டிங் அலுவலர் கர்னல் தினேஷ் சிங் தன்விர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:

நான் ஒரு கல்வியாளர் இல்லை. அந்த அனுபவம் எனக்கு இல்லை. ஆனால், ஒரு பயனாளியாக, பெற்றோராக மற்றும் மாணவராக இங்கு பேசுகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தனித்திறனுடனும், புதிய யோசனைகளை சிந்திக்கும் திறன் உடையவர்களாக உள்ளனர். ஆனால், அதற்கு செயல் வடிவம் கொடுக்க முன் வருவதில்லை.

இதுபோன்ற கருத்தரங்குகள் புதிய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவருக்கும் பொருந்தக்கூடிய செய்முறை பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

இன்றைய காலட்டத்தில் ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இல்லை. ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுவதே இதற்கு காரணம். அரசு பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் தான் வழங்கப்படுகிறது.

மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்க திறமை மிகுந்த ஆசிரியர்கள் தேவை. அதனால் அவர்களுக்கு ஊதியம் அதிகமாக வழங்க வேண்டும்.

அதிக வேலை நேரம் என்பது ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருக்காது. எங்கு அதிக நேரம் ஒருவர் வேலை செய்கிறாரோ அங்கு புதிய சிந்தனைகள் தோன்றுவது மறைகிறது, சில பிரச்சினைகள் எழுகிறது.

இன்றைய கால குழந்தைகள் மத்தியில் மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பழக்கம் மறைந்து வருகிறது. இது வளர்ச்சி அல்ல மாற்றம் மட்டுமே.

சொந்தங்கள், அண்டைவீட்டார்கள், தாய் தந்தை மற்றும் மூதாதையர்களுடன் பேசுவதையே குறைத்து வருகின்றனர். பள்ளி படிப்பை கடந்து இந்த மதிப்புகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

மதிப்பெண்ணை மட்டும் கணக்கிடாமல் மாணவர்கள் எந்த நிலையையும் சமாளிக்கு மனோ தைரியத்தை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு கர்னல் தினேஷ் சிங் தன்விர் பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சகத்தின் இன்னோவேசன் இயக்குனர் மோகித் கம்பீர், இ.பி.எஸ்.ஐ ஆலோசகர் சித்தார்த் ஜெயின், கல்வியாளர்கள் மணிமேகலை மோகன், அனுஷா ரவி,ஸ்வாதி அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe