வீடு புகுந்து முதியவரைத் தாக்கி நகைகளைப் பறித்துச் சென்ற 2 பெண்கள் கைது

published 2 years ago

வீடு புகுந்து முதியவரைத் தாக்கி நகைகளைப் பறித்துச் சென்ற 2 பெண்கள் கைது

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டம் பல்லடம் ரோடு எஸ். ஆர் லே அவுட் பகுதியில் தேவராஜ் (58) என்பவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத 2 பெண்கள் வீடு புகுந்த தன்னைத் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த ஒன்பது சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாகவும், இது சம்பந்தமாக தேவராஜ் நேற்று முந்தினம் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டதில் வீடு புகுந்து கொள்ளையடித்தவர்கள் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த வடிவேல் குமார் என்பவரது மனைவி பவித்ரா தேவி (26) மற்றும் பிரசாந்த் என்பவரது மனைவி விஜயலட்சுமி (24) என்பது தெரிய வந்தது.

எனவே அவ்விரண்டு பெண்களையும் கைது செய்து அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 9 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைப்பேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையின் எண் போன்ற எண்களைத் தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe