வால்வோ காரின் சொகுசு எஸ்யுவி XC40 Recharge கார் அறிமுகம்

published 2 years ago

வால்வோ காரின் சொகுசு எஸ்யுவி XC40 Recharge கார் அறிமுகம்

வால்வோ கார் இந்தியா, முதன்முதலாக உள்நாட்டிலேயே  அசெம்பிள் செய்யப்பட்ட முழு எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யுவி XC40 Recharge எனும் புதிய வகை எலக்ட்ரிக் காரின் விற்பனையை தொடங்கியது.

வால்வோ கார் இந்தியா, தனது முழு எலெக்ட்ரிக் XC40 Recharge காரின் விற்பனையை நாட்டில் தொடங்கியது. VOLVO XC40 Recharge முதன்முதலாக இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட முழு எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யுவி ஆகும். இந்நிறுவனம் பெங்களூரில் அதிநவீன வசதிகளுடன் அமைந்துள்ள தொழிற்சாலையில் கார்களை அசெம்பிள் செய்து வருகிறது.


இந்தியாவிலேயே முதன்முதலாக அசெம்பிள் செய்யப்பட்ட முழு எலெக்ட்ரிக்  சொகுசு எஸ்யுவி காரை டெலிவரி செய்வதை வாடிக்கையாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.. வரும் 2030ஆம்  ஆண்டிற்குள் முழு எலக்ட்ரிக் கார் நிறுவனமாவதற்கான  பயணத்தின் தொடக்கமாக இந்த டெலிவரி இருப்பதால், இது வரலாற்று சிறப்புமிக்கது.  ஆன்லைனில் விற்பனை துவங்கிய இரண்டு மணி நேரத்திலேயே 150 கார்கள் புக்கிங் செய்யப்பட்டு,  மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வால்வோ கார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், ஏறத்தாழ 500 கார்களுக்கான ஆர்டர் முன்கூட்டியே கிடைத்துள்ளது என்றும், அவற்றில் 100 கார்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்தார். மற்ற வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டு படிப்படியாக  டெலிவரி செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்..
வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி காரானது இந்தியாவில் சொகுசு கார்களை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்த காரை ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க முடியும். இந்த சிறப்பம்சம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றியுள்ளது.இந்நிறுவனம் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள், ஹைபிரிட் கார் உட்பட எரிபொருள் மூலம் இயங்கும் கார்களின் உற்பத்தியை குறைத்து விட்டு முழு எலெக்ட்ரிக் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe