மரணத்தின் விழிம்பில் வாழும் மக்கள்.. கோவையில் அச்சம் நிறைந்த குடியிருப்புகள்

published 2 years ago

மரணத்தின் விழிம்பில் வாழும் மக்கள்.. கோவையில் அச்சம் நிறைந்த குடியிருப்புகள்

கோவை:  கோவையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும் என்று அதில் வாழும் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம்,  வடக்கு நல்லிக்கவுண்டன்பாளையம், தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையிலானோர் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்ததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு   அரசு சார்பில் சுமார் 110 தொகுப்பு வீடு கட்டப்பட்டன.

 இந்த வீடுகள் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த வீடுகளில் 500க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், இந்த தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. கூரைகளில் பூசப்பட்டிருக்கும்  சிமெண்ட் கலவை அவ்வப்போது பெயர்ந்து விழுவதாகவும், இந்த வீடுகள் இடிந்து விழுந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் என்றும் இந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

அதுவும் மழைக்காலங்களில் இந்த வீடுகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தனர்.  சிதிலமடைந்து தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர்கால அடிப்படையில் இவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe