வால்பாறை எஸ்டேட்டில் யானைகள் முகாம்..தேயிலை பறிப்புக்கு வனத்துறை தடை..!

published 2 years ago

வால்பாறை எஸ்டேட்டில் யானைகள் முகாம்..தேயிலை பறிப்புக்கு வனத்துறை தடை..!

வால்பாறை:வால்பாறை அருகே, நேற்று காலை தேயிலை காட்டில் யானைகள் முகாமிட்டதை தொடர்ந்து, அங்கு தொழிலாளர்கள் தேயிலை பறிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

வால்பாறையில் பருவமழைக்கு பின், வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதனால், கேரளா மாநிலத்தில் இருந்து, மளுக்கப்பாறை, பன்னிமேடு வழியாக இடம் பெயர்ந்து வரும் யானைகள், வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.குறிப்பாக, உருளிக்கல், சேக்கல்முடி, நடுமலை, சின்னக்கல்லார், மாணிக்கா, நல்லகாத்து, பன்னிமேடு, சங்கிலிரோடு, பச்சமலை, சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட்டில், நேற்று காலை, ஒன்பது யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டன. அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் யானைகளை கண்டு ரசித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பருவமழைக்கு பின், யானைகள் இடம்பெயர்தல் அதிகரித்துள்ளது. நல்லகாத்து எஸ்டேட் பகுதியில், காலை முதல்குட்டியுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணியர், யானைகளை தொந்தரவு செய்யாமல், தொலை துாரத்தில் இருந்து கண்டு ரசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யானைக்கு மிக அருகில் சென்று, 'செல்பி' எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு வனத்துறையினர் கூறினர்.

கோவையில் சில்க் மார்க் தரத்துடன் கிடைக்கும் பட்டு சேலைகள்.. எங்கே..? என்னென்ன? முழு விவரங்களுக்கு இந்த வீடியோவை காணலாம்…  https://youtu.be/YoNfhv5ckJE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe