மண் மாதிரி சேகரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த குமரகுரு கல்லூரி மாணவிகள்

published 2 years ago

மண் மாதிரி சேகரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த  குமரகுரு கல்லூரி மாணவிகள்

கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரம் ஊரக மன்ற ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவிகள் தனநந்தினி, சக்திமகேஸ்வரி, மதுமிதா, ஜனனி, ஐஸ்வர்யா, நிவாஷினி, காவ்யா, சந்தியா, ஹர்ஷினி ஆகியோர் இணைந்து கோவில்பாளையம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிக்கும் முறை பற்றியும் மண் மாதிரி முடிவின்படி உரப்பரிந்துறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

மண் மாதிரி எடுக்கும் போது அந்தப் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம், வேளாண்மை முறை, பயிர் சுழற்சி ஆகியவற்றுக்கு ஏற்ற முறையில் மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, கால்வாய், மரத்தடி நிழல் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் குப்பை உரங்கள், பூஞ்சான் மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.

மண் மாதிரி எடுக்கும் முறை- நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மாதிரி எடுக்க வேண்டும், உரம் போட்டு மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு எடுக்க வேண்டும், ஆங்கில எழுத்து V போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கிவிட வேண்டும். ஒரு வயலில் 10 முதல் 15 இடங்களில் சேகரிக்க வேண்டும், மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும், எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறும்பி வாயிலாக மண் மாதிரி எடுத்து பிளாஸ்டிக் பக்கெட்டில் சேகரிக்க வேண்டும்.

அந்த மண்ணை நன்றாக கலக்கி அதிலிருந்து அரைக்கிலோ மாதிரி சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்ப வேண்டும் நன்கு உலர்ந்த பின் சுத்தமான துணிப்பையில் சேகரித்து அதன் மீது விவசாயின் பெயர் விலாசம் சர்வே எண் தேதி பயிரிடப்பட்ட பயிர்கள் பற்றிய விவரங்களை எழுத வேண்டும் பின்பு மண் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் ஆய்வு முடிவுகளை கொண்டு அதற்கு ஏற்றார்‌ போல் உரங்களை பயன்படுத்துமாறு மாணவிகள்  விவசாயிகளுக்கு  எடுத்துறைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe