கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் மாதந்தோறும் ஒரு நாள் ஒவ்வொரு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின் தடை அறிவிக்கப்படுவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கோவையில் இன்று (20ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின் வருமாறு:-


காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, கைகோளாப்பாளையம்,

வள்ளியம்பாளையம், பாலாஜி நகர், கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி  நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர்,

மகேஸ்வரி நகர், செங்காளியப்பன் நகர், ஜீவா நகர் மற்றும் குமுதம் நகரில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், கோவில்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று மின் தடை ஏற்பட உள்ளது. அந்த பகுதிகள்:-

சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம், கோ இந்தியா பகுதி, வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம்,

கொண்டையம்பாளையம், குன்னத்துார், காளிபாளையம் மற்றும் மொண்டிகாளிபுதுார் ஆகிய பகுதிகளிலும் இன்று மின் விநியோகம்  இருக்காது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe