கோவையில் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது

published 2 years ago

கோவையில் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது

கோவை: கோவையில் தொடர்ந்து வரும் பிக் பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிப்பதற்காகக் குழு அமைக்கப்பட்டது.

கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் காவல் சரக கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திவாகர்(26), கண்ணையா (30), பார்வதி(67) முத்தம்மா(23), கீதா(24) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஐவர் மீதும் கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe