பேரறிவாளனின் விடுதலையைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணி கட்டி போராட்டம்

published 2 years ago

பேரறிவாளனின் விடுதலையைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணி கட்டி போராட்டம்

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: 

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் பேரறிவாளனின் விடுதலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.ஆனால் காங்கிரஸ் சார்பில் பேரறிவாளன் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று கோவை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி சாலையில் அமர்ந்து காங்கிரஸார் அமைதிப் போராட்டம் நடத்தினர். மேலும் இதில் வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்குக் கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்ற தலைப்பில் பேனர்கள் வைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் வாயில் வெள்ளை துணி கட்டி அமைதிப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe