சின்ன தடாகம் ஊராட்சித் தலைவர் தேர்தல்: அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி செல்லும் என நீதிமன்றம் அறிவிப்பு

published 2 years ago

சின்ன தடாகம் ஊராட்சித் தலைவர் தேர்தல்: அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி செல்லும் என நீதிமன்றம் அறிவிப்பு

கோவை: தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டம் சின்ன தடாகம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தி. மு. க. ஆதரவு பெற்ற சுதா, அ. தி. மு. க ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர்.

தி. மு. க  ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின் அ. தி. மு. க ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு என்பவர் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.

மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 4 பென்டிரைவர்கள் சீலிடப்பட்ட கவரில் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகர் முன்பு மாவட்ட நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று நீதிபதி ராஜசேகர் அதனை ஆய்வு செய்தார். சின்ன தடாகம் ஊராட்சியில் மொத்தம் பதிவான வாக்குகள் 5,375. இதில் அ. தி. மு. க ஆதரவாளரான சவுந்திரவடிவு 2,553 வாக்குகளும், தி. மு. க ஆதரவு பெற்ற சுதா 2,551 வாக்குகளும் பெற்றிருந்தனர். அத்துடன் சுயேட்சை வேட்பாளர் 65 வாக்குகள், செல்லாத வாக்கு-206.

தேர்தல் முடிவில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் அ. தி. மு. க ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு வெற்றி பெற்றார். இது செல்லும் என நீதிபதி ராஜசேகர் தீர்ப்பு அளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe