பேரூர் கோவிலில் இனி பேட்டரி காரில் பயணிக்கலாம்..! ; துவக்கி அமைச்சர்

published 2 years ago

பேரூர் கோவிலில் இனி பேட்டரி காரில் பயணிக்கலாம்..! ; துவக்கி அமைச்சர்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களுக்கான பேட்டரி வாகனத்தை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் இந்து சமய அறநிலையத்துறை தனது பயணத்தை மனநிறைவோடு ஒருவருடத்தை நிறைவு செய்து மாற்று கருத்துள்ளவுளர்களும் மகிழ்ந்து வரவேற்கின்ற அளவில் செயல்பட்டு வருகிறது எனவும்,
சட்டமன்றத்தில் அறிவிப்பு எண் 35-ல்  அறிவிக்கபட்டது போல் ஏற்கனவே இருக்கின்ற  பழுதடைந்த 21 மின்கல ஊர்திகளை பழுது நீக்க வேண்டும் ,அதுபோக 13 திருகோவில்களில் மின்கல ஊர்திகளை ஏற்படுத்த முதல்வர் அறிவித்திருந்தார்.

அதில் முதலாதவதாக, பேரூரில் மின்கல ஊர்தி சேவை துவக்கி வைக்கப்பட்டதோடு, அறிப்பு எண் 48-ல் ஐந்து திருக்கோவில்களில் மலைப்பாதை அமைக்க ஒரு கோடி ஒதுக்கீடு செய்து அடிப்படை கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
 

அதில் கண்ணகி திருக்கோவில்,போளூர்  நரசிம்மன் திருகோவில், திருவண்ணாமலை பருவதமலை கோவில் ,சதுரகிரி அய்யன் திருக்கோவில்,வெள்ளிங்கிரி திருக்கோவில் ஆகிய கோவில்களில் நேற்று தானும் துறை ரீதியான அதிகாரிகளும் ஆய்வு செய்ததாக தெரிவித்தார். 

வெள்ளிங்கிரி பாதைகளை சீரமைக்க முதல்வரிடம் கலந்து பேசி அதனை விரைவில் சரி செய்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கரிகால சோழனால் கட்டபட்ட பேரூர் கோவில் கடந்த 2010-ம் ஆண்டு   குடமுழக்கு நடைபெற்றதாகவு தற்போது பேரூர் கோவிலுக்கு ஆறுகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு போடபட்டுள்ளது.கோவை  மாவட்டத்தில் 23  கோயில்கள் 63 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளபட்டு குடமுழக்குக்கு தாயராக உள்ளது.ஆத்திகர்கள் நாத்திகர்கள் அனைவருக்கும் ஒரு சேர்ந்த ஆட்சி. 

இந்த ஆட்சிக்குப் பேருதான்  திராவிட மாடல் ஆட்சி 
இறையன்பர்கள்,பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை சரிசெய்து தர முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் ஒவ்வொரு கோவிலாக ஆய்வு செய்து வருகிறேன் மருதமலை கோவிலில் லிப்ட் அமைக்க ஆறு கோடி அளவிற்கு கூடுதலாக நிதி தேவைபடுகிறது எனவும் 45லிருந்து 50  நாட்களில் லிப்ட் அமைக்கும் பணிகள் துவங்கும் எனவும் தெரிவித்தார்.

வெள்ளிங்கிரி மலை ஏற்றம் புதிய அனுபவம்,அதிக காற்று, அதிக குளிர் நிலவுகிறது எனவும் செங்குத்தான மலை பாதையில் பக்தர்கள்  ஏறுவதற்கு சில இடங்களில் கடிமான சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அனுவாவி முருகன் கோவிலுக்கும்,பழனி இடும்பன் மலை கோவிலுக்கும் ரோப்கார் அமைப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.. 

அதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு அறிக்கை பெறப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சேகர் பாபு, பெரிய கோவல்களில் அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் பாலூட்டும் அறைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு சில திருக்கோவில்களில் உற்புறமாகவும்,ஒரு சில திருக்கோவில்களில் கழிப்பறைகள் வைத்து கொள்ள சில சங்கங்கடங்கள் இருப்பதாகவும் 48 கோவில்களில் ஒரு ஆண்டுக்குள்  குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் துறையின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

அண்ணாமலை ஆதீனத்திற்கு பல்லாக்கு தூக்குவது தொடர்பான கேள்விக்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது எனவும், பக்தியை வைத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுகொள்வது இல்லை எனவும் அழையாத வீட்டில் நுழையாத  விருந்தாளியாக போகின்றவர்களை பற்றி பதில் கூற விரும்பவில்லை எனவும் ஆண்டவன் அழைத்தால்  தான் வர முடியும் எனவும் அழைக்காமல் வரமுடியாது எனவும் தெரிவித்தார். 

தமிழக முதல்வரின் ஆட்சிதான் திருக்கோவில் வரலாற்றில் பொற்கால ஆட்சி என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe