ஏப்ரல் 6: சர்வதேச நாட்காட்டியில் இந்த தினத்தின் சிறப்பு என்ன தெரியுமா...?!

published 1 year ago

ஏப்ரல் 6: சர்வதேச நாட்காட்டியில் இந்த தினத்தின் சிறப்பு என்ன தெரியுமா...?!

வளர்ச்சி என்பது மனித வாழ்வில் இன்றியமையாதது. இந்த வளர்ச்சி ஆனது சீராக நடைபெற நாம் நாள்தோறும் தெரிந்தும் தெரியாமலும் பல முயற்சிகளை செய்து வருகிறோம். ஒரு மனிதனின் வளர்சிக்கே இத்தனை முயற்சிகள் தேவைபடுகின்றன என்றால், இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், உலகத்தின் வளர்ச்சிக்கும் நாம் எவ்வளவு முனைப்புடன் செயல்பட வேண்டும் என நாம் அனைவருமே சிந்திக்க வேண்டும்.

வளர்ச்சி என்ற உடனே நம் நினைவிற்கு வரும் அடுத்த எண்ணம், இந்த வளர்ச்சியினால் ஏற்படும் பெரிய, சிறிய மாற்றங்களும் அவற்றால் நாம் சந்திக்கும் இன்னல்களுமே ஆகும். இருப்பினும் வளர்ச்சியை நோக்கி நாம் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வளர்ச்சியை ஒற்றே சமாதானம் மற்றும் அமைதிக்கான வழிகள் நமக்கு தெரிந்துவிட்டால் அதுவே நம்மில் பெரிய நிம்மதியை ஏற்படுத்திவிடும்.

'ஆல் வோர்க் அண்ட் நோ ப்ளே மேக்ஸ் ஜாக் அ டல் பாய்' என்னும் ஆங்கீல கூற்றும் 'ஓடி விளையாடு பாப்பா' எனக் கூறும் நம் பாரதியின் கூற்றும் நமக்கு விளையாட்டின் மகத்துவத்தையும், விளையாட்டின் மூலமாக பல இன்னல்களை கடக்கலாம் என்ற உத்வேகத்தையும் நமக்கு உணர்த்துகின்றன.

அந்த வரிசையில், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் (UN) சர்வதேச விளையாட்டு தினமாக ஏப்ரல் 6 கொண்டாடப்படுகிறது. இது உலகளவில் அமைதியை மேம்படுத்துவதிலும் கலாச்சாரத் தடைகளை அழிப்பதிலும் விளையாட்டின் ஆற்றலை அங்கீகரிக்கிறது.

வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதோடு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) துணையுடன் பலருக்கு விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதையும் வலியுறுத்துகிறது. உலகின் முன்னணி விளையாட்டு வீரர்கள் சிலர் சமூகத்துடன் இணைந்து விளையாட்டு வாய்ப்புகளின் மூலம் வாழ்க்கையை வளப்படுத்தவும், குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சியை சீர்படுத்தும் நாளாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

IOC மற்றும் UN ஆகிய அமைப்புகள் சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக விளையாட்டைப் பயன்படுத்துவதில் நீண்டகால அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளன. மேலும் இதன் மூலம் பல திட்டங்களலையும் செயல்படுத்தி வருகின்றன. இரண்டு அமைப்புகளும் இணைந்து ஒலிம்பிக் விளையாட்டு போன்ற விளையாட்டு நிகழ்வுகளையும் கலாச்சார புரிதலை ஏற்படுத்தவும் வகையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு வேலை செய்கின்றனர்.

ஆகஸ்ட் 23, 2013 அன்று, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6 அன்று கொண்டாடப்படும் என்று UN அறிவித்தது.  இந்த தேதி 1896-இல் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை குறிக்கிறது என்பது கூடுதல் தகவல். இந்த ஆண்டிற்கான மையக்கருத்து ‘உலகம் மற்றும் மக்களுக்கான மதிப்பு கூட்டு’ என்பதாகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe