முடிச்சு விட்டீங்க போங்க... தங்கம் விலை புதிய உச்சம்...!

published 1 week ago

முடிச்சு விட்டீங்க போங்க... தங்கம் விலை புதிய உச்சம்...!

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதிரடியாக விலை சரிவைச் சந்தித்து வந்தன.

மிகக்குறுகிய காலமே விலை சரிவு நீடித்தது. அதன்பின், தங்கம் விலை தாறுமாறாக அதிகரிக்கத் தொடங்கியது.

அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7050க்கு விற்பனையானது. அதாவது ஒரு பவுன் ரூ.56,400க்கு விற்பனை செய்யப்பட்டது.

இம்மாதத்தில் தங்கம் விலை பலமுறை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், விலை ஏற்றமே பிரதானமாக இருந்தது.

கடந்த, 15ம் தேதி ரூ.7,095க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம்,  நேற்று ரூ.7,300க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதனிடையே இன்று ஒரு பவுனுக்கு ரூ.520 விலை அதிகரித்துள்ளது; 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,340க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.59,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கிராம் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6030க்கும், ஒரு பவுன் ரூ.49,040க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலைக்கு ஏற்ப வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe