கோவையில் ஸ்ரீ மாருதி கான சபா துவக்கம்...

published 2 months ago

கோவையில் ஸ்ரீ மாருதி கான சபா துவக்கம்...

கோவை: தமிழ்நாட்டில் உள்ள முன்னணி  இசை மற்றும் பரதநாட்டிய கலைஞர்களால் கோவை ஆர்.எஸ் புரத்தில் ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் கூடிய ஸ்ரீ மாருதி கான சபா தொடங்கபட்டது. இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பூஜ்யஶ்ரீ மாதாஜி வித்தாம்மா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், சங்கர் குழமங்களின் இயக்குனர் மோகன் சங்கர், கோவை மாவட்ட ரோட்டரி ஆளுநர் சுந்தரவடிவேலு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். 

இந்த ஒலி,ஒளி அமைப்புடன் கூடிய ஶ்ரீ மாருதி கான சபா அரங்கம் கோவை வாழ் இசை மற்றும் நடனத்துறை கலைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக ஶ்ரீ மாருதி கான சபா நிர்வாகிகளான மிருதங்க கலைஞர் மாயவரம் விஸ்வநாதன் மற்றும் ஒலி,ஒளி தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணன் முருகன் ஆகியோர் தெரிவித்தனர். 

மேலும் கோவை வாழ் மக்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் ஶ்ரீ மாருதி கான சபாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களால் இசை, நடனம் மற்றும் களரி பயிற்று போன்ற மனம் மற்றும் உடல் நலம் பேணும் கலைகள் கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர். 

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இசை மற்றும் கலைஞர்கள்,  ஶ்ரீ மாருதி கான சபாவில் நடனம் இசை கலை மற்றும் இசை வாத்தியங்களுக்கு பயிற்சி அளிக்கப் போவதாகவும் அதேபோல் மாதம்தோறும் இசை மற்றும் நடன கச்சேரி அரங்கேற்ற போவதாகவும் தெரிவித்தனர். அதேபோல பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு youtube, தொலைக்காட்சி மூலம் இசை,நடன கச்சேரிகளை பார்ப்பதற்கு பதிலால நேரில் வந்து அதனைப் பார்க்கும் போது உணர்ச்சிபூர்வமாக இருக்கும் என்றும் வலைதளங்களில் மூலமாக பார்க்கும் போது அதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாது எனவும் தெரிவித்தவர்கள் இசை மற்றும் நடன கச்சேரிகளை நேரில் சென்று பார்த்து, கேட்டால் மட்டுமே அதனின் ரசனை உணர்வுபூர்வமாக அறிய முடியும் என்றும் தற்போதைய தலைமுறைகள் அனைத்தையும் வலைதளங்கள் மூலம் கற்பிப்பதால் எந்தவிதமான பலனும் கிடைக்காது என்று கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe