படி ஏற முடியதவர்களும் இனி மருதமலை முருகனை தரிசனம் செய்யலாம்: மின்தூக்கியை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதல்வர்

published 1 year ago

படி ஏற முடியதவர்களும் இனி மருதமலை முருகனை தரிசனம் செய்யலாம்: மின்தூக்கியை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதல்வர்

கோவை: மருதமலை கோவிலில் 5.20 கோடி மதிப்பிட்டில்  மின்தூக்கி அமைப்பதற்கான பூமி பூஜையை முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்தூக்கி அமைக்க ரூ. 5.20 கோடி மதிப்பீட்டிலும், மருதமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் வரையில் உள்ள தார் சாலை சீரமைக்கும் பணியை 3.51 கோடி ரூபாய்  மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக முதல்வர் மு‌.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி,  இந்து சமய‌ அறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி,  துணை மேயர் வெற்றிச்செல்வன்,  கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டவர்கள் காணொளி காட்சி மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பூஜை செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம் , வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe