கந்துவட்டி கொடுமை- சுவரொட்டிகளை ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

published 2 years ago

கந்துவட்டி கொடுமை- சுவரொட்டிகளை ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை மாவட்ட குடிமக்கள் வாழ்வுரிமை சங்கத்தின் மூலம், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், கந்துவட்டிக் காரரான மனோகரன் என்பவர் வட்டி கேட்டு தொல்லை செய்வதாகவும் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். 

இது குறித்துப் பேசிய குமார், தனது தந்தை வெள்ளியங்கிரி சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரிடமிருந்து கடனாக 50 ஆயிரம் வாங்கியதற்கு மீட்டர் வட்டி எனக் கூறி பல லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டும் எனத் தொல்லை கொடுத்து வந்ததாகவும் இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகாரை திரும்பப் பெறச் சொல்லி சில ஆட்களைக் கொண்டு மிரட்டுவதாகவும் கூறினார். 

தற்போது தனது தந்தை கால் அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனோகரன் தன்னையும் தனது மாற்றுத்திறனாளி தம்பியையும் பணம் தரச் சொல்லித் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மனு அளிக்க வந்த குமார் மற்றும்  அவரது உறவினர்கள் "கந்துவட்டிக் கொடுமை...அராஜகம்... மீட்டர் வட்டி... துப்புரவுத் தொழிலாளர்களின் ஏடிஎம் அட்டைகளை சிங்காநல்லூர் கந்துவட்டி மனோகரனிடமிருந்து பறிமுதல் செய்க, வெள்ளியங்கிரி கொடுத்த கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை எடுத்து மனோகரனைக் கைது செய்ய வேண்டும்", போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தி மனு அளிக்க வந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe