நீலகிரி முதுமலை புலிகள் காப்பக புல்வெளிகளில் உயரமான இடத்தில் அமர்ந்திருந்த புலி

published 1 year ago

நீலகிரி முதுமலை புலிகள் காப்பக புல்வெளிகளில் உயரமான இடத்தில் அமர்ந்திருந்த புலி

கோவை: முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், வறட்சி ஏற்பட்டதாலும் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது. மேலும் வனவிலங்குகள் வேறு பகுதிக்கும் இடம் பெயர்ந்தும் வந்தன. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. இதன் காரணமாக தற்போது முதுமலை பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் புலி ஒன்று புல்லில் படுத்து இருந்தது. இதை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வீடியோ எடுத்தனர். நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்த புலி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை சுற்றுலா பயணிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “தற்போது மழை பெய்துள்ளதால் வனவிலங்குகள் சாலையையொட்டி வருகின்றன. எனவே கோடை சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், முதுமலை சாலைகளில் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe