வாரிசு சான்றிதழ் பெற்று தருவதாகக் கூறி ரூ 5 ஆயிரம் அபேஸ்...!

published 2 years ago

வாரிசு சான்றிதழ் பெற்று தருவதாகக் கூறி ரூ 5 ஆயிரம் அபேஸ்...!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA


கோவை: கோவை வடக்கு துணை தாசில்தாராக இருப்பவர் லட்சுமி நாராயணன். அந்த அலுவலகத்தில் அரசு ஊழியர் எனக்கூறி வாரிசு சான்றிதழ் பெற ரூ 5 ஆயிரம் பெற்று ஏமாற்றிய நபரை கைது செய்யுமாறு துணை தாசில்தார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு முகாமில் ஜார்ஜ் மேத்யூ என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். அவருக்கு வாரிசு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதில் அவரது தங்கை எலிசபெத் ஜார்ஜின் திருமணம் குறித்த தகவல்கள் தவறாக இடம் பெற்று இருந்தது. இதனையடுத்து மீண்டும் வாரிசு சான்றிதழிலுள்ள தவறுகளைத் திருத்தி தருமாறு ஜார்ஜ் மேத்யூ கேட்டார். இந்த நிலையில் சின்னத் தடாகம் அருகே உள்ள வீரபாண்டியை கேசவமணி (47) என்பவர்  வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்ப்பதாகக் கூறி வாரிசுச் சான்றிதழிலுள்ள தவற்றைத் திருத்திக் கொள்வதற்கு ரூ 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கூறி ஜார்ஜ் மேத்யூவிடம்  ரூ 5 ஆயிரம் வாங்கியுள்ளார். அவர் வடக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். தன்னை அரசு ஊழியர் எனக்கூறி ரூ 5 ஆயிரம் பெற்று ஏமாற்றிய கேசவமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார் புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe