கோவையில் மாயமான சிறுவன் ஆட்டோவில் ஏறிச் சென்றார்..? கடத்தப்பட்டாரா? சிறுவனை மீட்க 6 தனிப்படைகள் அமைப்பு..!

published 1 year ago

கோவையில் மாயமான சிறுவன் ஆட்டோவில் ஏறிச் சென்றார்..? கடத்தப்பட்டாரா? சிறுவனை மீட்க 6 தனிப்படைகள் அமைப்பு..!

கோவை: 
சென்னை ஐயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகன் யுவன் கதிரவன் (வயது 13). இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோடை விடுமுறையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் மகாலட்சுமி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் கோவை மசக்காளிபாளையத்தை அடுத்த சின்னசாமி லே அவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார்.

இதனிடையே நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் யுவன் கதிரவன் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் யுவன் கதிரவனை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

பின்னர் சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

அந்த லோடு வேனின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்திய போது வேடப்பட்டியில் உள்ள அந்த வேன் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த லோடு வேனை யாரோ மர்ம நபர் கடத்தி சென்றதும், வழியில் சிறுவனை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதனிடையே சிறுவன் கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 6 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சிறுவன் யுவன் கதிரவன் நீலகிரி மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe