கோவையில் ஐடி ரெய்டு நிறைவு...

published 1 year ago

கோவையில் ஐடி ரெய்டு நிறைவு...

கோவை: கோவையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற ஐடி ரெய்டு முடிவடைந்தது.

 கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களாகக் கருதப்படுபவர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் கடந்த 26ம் தேதி காலை ஐடி ரெய்டு துவங்கியது.

 இதேபோல், அன்று தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, கரூர் போன்ற இடங்களில் சுமார் 40 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 சில இடங்களில் முடிவடைந்தாலும், கோவையில் 4 நாட்களாக ஐடி ரெய்டு தொடர்ந்தது.

 கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் வீடு, அலுவலகம், ரேஸ்கோர்சில் உள்ள காயத்ரி என்பவரது வீடு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, தம்மம்பதி உள்ளிட்ட 7 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

 நேற்று 4-வது நாளாகச் செந்தில் கார்த்திகேயன், காயத்ரி ஆகியோரது வீடுகளில் ஐடி அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

 அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த ரெய்டு நேற்று இரவுடன் முடிவடைந்தது. ஆனால் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரம் வெளியிடப்படவில்லை.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe