இது போல் போலி விசா மோசடியில் ஈடுபடலாம்... உஷார்..!

published 1 year ago

இது போல் போலி விசா மோசடியில் ஈடுபடலாம்... உஷார்..!

கோவை: கோவையில் போலி விசா வாங்கி கொடுத்து ரூ. 11.71 லட்சம் மோசடி செய்ததாக ஏஜென்சி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் பிரேமரத்னா. இவரது மகன் மங்கலநிசாந்தா. இவர் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

 இவர் கடந்த 23.10.2021ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் வடகோவையில் ‘‘ஜேகே ஓவர்சீஸ்’’ என்ற பெயரில் ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா(34) என்பவரை விசா பெறுவதற்காக அணுகினார். 

அப்போது அவர், எனக்கு மற்றும் எனது உறவினர்களுக்கு விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 இதனையடுத்து அவர் விசா பெறுவதற்காக ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்தார். அப்போது ஜஷ்வா விசா பெற ரூ. 11,71,466 செலவாகும் எனக் கூறினார். 

இதனைத் தொடர்ந்து மங்கலநிசாந்தா உள்ளிட்ட அவரது உறவினர்கள் சேர்ந்து விசா பெறுவதற்காக ஜஷ்வாவின் வங்கிக் கணக்கில் பல்வேறு கட்டங்களாக ரூ. 11,71,466 செலுத்தி உள்ளனர். பின்னர் அவர்களுக்கு ஜஷ்வா விசா பெற்றுக் கொடுத்தார். ஆனால் அந்த விசா போலியானது.

 இதனையறியாமல் மங்கலநிசாந்தாவின் உறவினர் ஒருவர் அந்த விசா மூலமாக இலங்கை சென்றார். அங்கு விமானநிலையத்தில் அவரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு அவர் வைத்திருந்தது போலி விசா என்பது தெரியவந்தது.

 இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். இந்த தகவல் மங்கலநிசாந்தாவுக்கு தெரியவந்தது. 

அவர் உடனே இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் ஏஜென்சி உரிமையாளர் ஜஷ்வா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe