செய்வினை, தோஷங்களை நீக்கும் கோவை ஸ்ரீ விஷ்ணுமயா கோவில்..  எங்கு உள்ளது? வழிபாட்டு முறைகள் என்ன?

published 1 year ago

செய்வினை, தோஷங்களை நீக்கும் கோவை ஸ்ரீ விஷ்ணுமயா கோவில்..  எங்கு உள்ளது? வழிபாட்டு முறைகள் என்ன?

கோவை: கேரள மக்களால் குட்டி சாத்தன் என்று அழைக்கப்படும் தெய்வம் விஷ்ணு மயா சுவாமி. சாத்தன் என்றால் பாலகன் என்று பொருள். சிறு பிள்ளை வடிவில் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்த விஷ்ணு மயா சுவாமி சங்கடங்கள், தோஷங்கள் தடைகளைத் தீர்த்து வைப்பார் என்பது மக்களின் நம்பிக்கை.

ஸ்ரீ பேச்சியம்மன் மற்றும் விஷ்ணு மயா ஒரு சேர அருள்பாலிக்கும் திருக்கோவில் கோவை சுண்டக்காமுத்தூரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

கோவை சுண்டக்காமுத்துாரில் அமைந்துள்ள, ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ விஷ்ணு மாயா திருக்கோவிலுக்குத் தினமும் திரளான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

இங்கு வரக்கூடிய பக்தர்களின், வேண்டுதல்களுக்கு உடனுக்குடன், நிவர்த்தி கிடைக்கும் வகையில் அம்மன் பக்தர்கள் மத்தியில், நன்மதிப்பைப் பெற்றுள்ளார். கல்யாண காரியம், குழந்தை பாக்கியம், செவ்வாய் தோஷம், சனி தோஷம், பல கிரக தோஷங்களும், செய்வினை தோஷங்களும், மற்றும் திருமணத் தடை தோஷம், தொழில் விருத்தி என, பல்வேறு தடைகள் அம்மனின் அருளால் பக்தர்களுக்கு நீங்குவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

இத்திருக்கோவிலில் சனிக்கிழமை தோறும் மதியம் 1 மணியளவில், சிறப்புப் பூஜைகளும், அன்னதானமும் நடைபெறும். பக்தர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ற பரிகாரங்களைச் செய்யும் பொழுது அவர்களின் குறைகள் முற்றிலும் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி, மன நிறைவு அடைகின்றனர்

அமாவாசை நாளில் ஸ்ரீ விஷ்ணு மாயா, சுவாமிகளுக்குக் குருதி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். பவுர்ணமி அன்று சாத்திக பூஜை நடைபெறும், அதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நினைக்கும் காரியங்களை நிவர்த்தி அடையும்.

ஸ்ரீ பேச்சியம்மன் மற்றும் விஷ்ணு மயா ஒரே சேர அமைந்த திருக்கோவில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. கோவை சுண்டக்காமுத்துாரில் மட்டுமே அமைந்து உள்ளதால் இங்கு பக்தர்கள் அதிக அளவில் அம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe