நீட் தேர்வில் 720க்கு 720மதிப்பெண் -தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு..

published 1 year ago

நீட் தேர்வில் 720க்கு 720மதிப்பெண் -தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு..

https://we.tl/t-QlH3TA5BlL

கோவை:

 

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனத்தில் பயின்று நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களில்  பொது பிரிவில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை இந்நிறுவன மாணவர்கள் பெற்றுள்ளனர். 

அதில் விஜயவாடா பகுதியை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். 

மேலும் வருன் என்ற மாணவர் 715 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி 15 மாணவர்கள் 710 மதிப்பெண்களுக்கு மேலும் 30 மாணவர்கள் 705 மதிப்பெண்களுக்கு மேலும் 55க்கும் மேற்பட்ட மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றுள்ளனர். 

இதில் 200 மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலையரங்கில் இந்த நிறுவனத்தில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. 

இதில் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டப்பட்டது.

இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வருண் என்ற மாணவர் கோவை கிளையில் பயின்று 715 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் ஒன்பதாவது இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe