ப்ளூடூத், ஜி.பி.எஸ் வசதியுடன் விவசாயத்திற்கு தேவையான எலெக்ட்ரிக் வாகனம்

published 1 year ago

ப்ளூடூத், ஜி.பி.எஸ் வசதியுடன் விவசாயத்திற்கு தேவையான எலெக்ட்ரிக் வாகனம்

கோவை : வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்ல புளுடூத், ஜி.பி.எஸ் உட்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை உருவாக்கி கோவையை சேர்ந்தவர் அசத்தியுள்ளார்.

இந்தியாவின் முதன்மையான தொழிலாக விவசாயம் இருப்பதால் இந்தியாவின் முதுகெலும்பு என்று விவசாயத் தொழில் அழைக்கப்படுகிறது.  இதனால் நாட்டில் விவசாயம் சார்ந்த கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டம் தொழில் நகரமாக இருந்தாலும் இங்கு தென்னை, வாழை, காய்கறிகள் மற்றும் பட்டு விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 இதனிடையே வேளாண் விளை பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய இருசக்கர வாகனத்தை கோவையைச் சேர்ந்த பரதன் என்பவர் உருவாக்கியுள்ளார்.

இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் 10 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் இதில் 525 கிலோ மீட்டர் தூரம் வரையில் பயணிக்க முடியும். 

நாட்டில் பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த வாகனத்தை நமது மொபைல் போனில் ப்ளூடூத் மூலமாக இணைத்துக் கொண்டு வாகனத்தை கட்டுப்படுத்த முடியும். அதோடு இந்த இருசக்கர வாகனத்தில் ஜி.பி.எஸ் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

 இதன் மூலமாக விலாசம் தெரியாத பகுதிகளுக்கு கூட விவசாய பொருட்களை சரியாக கொண்டு செல்ல முடியும் என்கிறார்  இந்த வாகனத்தின் தயாரிப்பாளர்பரதன்.

பீம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனத்தை கோவையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 இதன் ஆரம்ப விலை 69 ஆயிரத்தில் இருந்து தொடங்குவதாகவும் இதன் தயாரிப்பாளர் பரதன் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe