கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

published 1 year ago

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவை: போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி   நடைபெறுவதை முன்னிட்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி 26ம் தேதி மாலை ரேஸ்கோர்ஸ் / தாமஸ்பார்க்கில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருப்பதால், போக்குவரத்தில், சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

(1) காமராஜர் ரோட்டிலிருந்து, தாமஸ்பார்கிற்கு DIG ரவுண்டானா வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக நிர்மலா காலேஜ், சுங்கம், திருச்சி ரோடு வந்து வெஸ்ட் கிளப் ரோடு

வழியாக ரேஸ்கோர்ஸை அடையலாம். (2) OLD BIG BAZAAR ரோட்டிலிருந்து (சாவித்திரி சண்முகம் ரோடு) - தாமஸ்பார்க் வழியாக அவிநாசி ரோட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

மாற்றாக - OLD BIG BAZAAR ரோடு, கலெக்டர் பங்களா, சூர்யா ரவுண்டானா, அப்பாசாமி காலேஜ் வழியாக அவிநாசி ரோட்டை அடையலாம்.

(3) ரேஸ்கோர்ஸ் சூர்யா ரவுண்டானாவிலிருந்து, அப்பாசாமி காலேஜ் ரோடு வழியாக வரும் வாகனங்கள் தாமஸ்பார்க் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக - திட்ட சாலை (SCHEME ROAD), பிக்பஜார் ரோடு வழியாக சென்று திருச்சி சாலையை அடையலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப, பொது மக்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe