மணிப்பூர் கலவரம்- அகில இந்திய கிறிஸ்தவர்கள் அமைப்பு சார்பில் மனு

published 1 year ago

மணிப்பூர் கலவரம்- அகில இந்திய கிறிஸ்தவர்கள் அமைப்பு சார்பில் மனு

கோவை: மணிப்பூரில் நடந்த கலவரத்தில் தேவாலயங்கள் தாக்கப்பட்டது குறித்து மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோவை அகில இந்திய கிறிஸ்தவர்கள் அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பல்வேறு கலவரங்களும் படுகொலைகளும் நடைபெற்று வருகின்றன. 

இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை அகில இந்திய கிறிஸ்தவர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில் மணிப்பூர் மாநிலத்திற்கு உடனடியாக ராணுவத்தை அனுப்பி கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதே சமயத்தில் இதுபோன்று கலவரத்தில் மதச்சாயம் அதிக அளவு பூசப்பட்டு வருவதாகவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe