விஜயமங்கலத்தில் ஶ்ரீ விஜயபுரி அம்மன் தேர் திருவிழா கோலாகலம்.. பிரத்தியேக புகைப்படங்கள்...!

published 1 year ago

விஜயமங்கலத்தில் ஶ்ரீ விஜயபுரி அம்மன் தேர் திருவிழா கோலாகலம்.. பிரத்தியேக புகைப்படங்கள்...!

ஈரோடு: விஜயமங்கலம் ஶ்ரீ விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் இரதோற்வம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் செண்டை மேளங்கள் முழங்க பக்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்களால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டம் விஜயமங்கலத்தில் ஶ்ரீ விஜயபுரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக ஶ்ரீ விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் இரதோற்வம் இன்று  நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இதில் முன்னால் அமைச்சர் மற்றும் கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, பெருந்துறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூனம்பட்டி ஆதீனம் 57 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ இராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் காலை 11.45 க்கு தேர் விஜயமங்கலம் ஈஷ்வரங்கோவில்  முன் நிலைசேர்ந்தது.

 

 

 

இத்திருவிழா இன்று ஆரம்பமாகி அடுத்த வாரம் புதன் கிழமை வரை சிறப்பு நிகழ்வுகலுடன் நடைபெற உள்ளது. நாளை (30ம் தேதி ) இரதோரற்சவம் தேரோட்டம் , மறுநாள் இரதோரற்சவம் ஆரம்பம் செய்து திருத்தேர் நிலை சேருதல்,மாட்டுத் தாவணி மற்றும் குதிரை சந்தை இன்று முதல் வரும் ஜூலை 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

 

கத்தியவாரி மற்றும் மார்வாரி குதிரைகளுக்கான கண்காட்சி வரும் 4ம் தேதியும் குதிரைகளுக்கான ரேக்ளா பந்தயம் வரும் 1ம் தேதியும்  மற்றும் நாட்டு மாடுகளுக்கான ரேக்ளா பந்தயம் 2ம் தேதியும்  நடைபெற உள்ளது.

ஏராளமான குதிரைகள் மற்றும் காளை மாடுகள் சந்தை மற்றும் ரேக்ளா போட்டியில் கலந்துகொள்ள உள்ளன.

இதேபோல் ஶ்ரீ விஜபுரி அம்மன் திருக்கோவில் எதிரில் உள்ள தோட்டத்தில் மாட்டுத்தாவணி மற்றும் குதிரை சந்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe