மூன்றாவது 'ரெய்ன்போ ப்ரைட்' அணிவகுப்பு கோவையில் ஜூன் 18ம் தேதி நடைபெறும்

published 2 years ago

மூன்றாவது 'ரெய்ன்போ ப்ரைட்' அணிவகுப்பு கோவையில் ஜூன் 18ம் தேதி நடைபெறும்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: 'தி கோயம்புத்தூர் கலெக்டிவ்' எனக் கூறப்படும் கோவையின் வானவில் கூட்டமைப்பு என்பது ஓரினச்சேர்க்கையாளர்கள், ஈரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், பெண்-ஆண் என்ற பாலினங்களுக்குள் அடங்காதவர்கள் மற்றும் பாலினமற்றோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கூட்டமைப்பு. 

இந்த கூட்டமைப்பு ஆண்டுதோறும் கோவையில் 'ரெய்ன்போ ப்ரைட் மார்ச்' எனச் சொல்லப்படும் மாற்றுப் பாலினத்துக்கான ஒரு அணிவகுப்பை நடந்தும். அதேபோல் இந்த ஆண்டிற்கான அணிவகுப்பு வருகிற ஜூன் 18ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சகோதரி அமைப்பு என்ற இயக்கம் ஒரு திருநங்கைகளின் குழுவாக, திருநங்கைகள் உரிமை ஆர்வலரும், கலைஞரும், எழுத்தாளருமான கல்கி சுப்பிரமணியத்தால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பே இந்த வானவில் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதின் முக்கிய உந்துகோல்.

இதைப் பற்றிக் கூறிய அக்கூட்டமைப்பின் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் கூறியதாவது:

"மாற்றுப் பாலினத்தவர்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்களின் நிலை பற்றிய விழிப்புணர்வு என்பது இவர்களைப் பற்றி அதிகம் பேசும் பொழுதே ஏற்படும். விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் நாம் அவர்களை நமது சமூகத்திற்குள் இணைப்பதோடு அவர்களுக்கான ஒரு இடத்தையும் ஏற்படுத்த முடியும். கோவிட் பெருந்தொற்றினால் இந்த அணிவகுப்பு இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுவிட்டது. இந்த ஆண்டு இந்த நிகழ்வு ஜூன் 5-ம் தேதி தொடங்கும். இதன் பகுதியாக நாடகப் பட்டறை, திரைப்பட திரையிடல், குழு விவாதம், நடன நிகழ்ச்சி போன்றவை இடம்பெறும்."

இந்த நிகழ்வு இன்று ரேஸ் கோர்ஸில் இரு சக்கர வாகன அணிவகுப்புடன் தொடங்கியது. இதன் முதல் மற்றும் இரண்டாம் அணிவகுப்புகள் 2009 மற்றும் 2019ல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe