கோவையில் 247 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

published 1 year ago

கோவையில் 247 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று சூலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த  தர்ஜரம்(30) மற்றும் கோவையைச் சேர்ந்த பேரரம்(46) ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,95,677 மதிப்புள்ள 247 கிலோகிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைபறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 208 நபர்கள் மீது 197 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 2757.3 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe