முந்தைய நாள் இரவே தற்கொலைக்கு தயாரான டிஐஜி விஜயகுமார் பரபரப்பு தகவல்

published 1 year ago

முந்தைய நாள் இரவே  தற்கொலைக்கு தயாரான டிஐஜி விஜயகுமார் பரபரப்பு தகவல்

கோவை:
கோவையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் முந்தைய நாள் இரவே தற்கொலைக்கு தயாரானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கோவை ரேஸ்கோர்சில் கோவை சரக டிஐஜி  விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:-
கோவையில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி மன அழுத்தத்தில் இருப்பது குறித்து அறிந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டி.ஐ.ஜியையும், அவரது மனைவியையும் அழைத்து ஐஜி அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரம் பேசியுள்ளார். 

அப்போது மன அழுத்தம் குறித்து கேட்டறிந்த அவர் அதிலிருந்து மீள்வது குறித்து சில வழிமுறைகளை தெரிவித்து கவுன்சிலிங் கொடுத்துள்ளார். இதேபோல், கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் டி.ஐ.ஜி-யிடம் பேசி உள்ளார்.

 கடந்த 10 ஆண்டுகளாக ஓசிடி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டி.ஐ.ஜி ஒரே மருத்துவரை பார்க்காமல்,  மாற்றி மாற்றி பார்த்து மருந்து எடுத்து வந்துள்ளார். அது தொடர்பாக இணையதளத்தில் நிறைய குறிப்புகள் எடுத்து ஆயுர்வேத மருந்துகளை எடுத்து இருக்கிறார்.  அவருடைய மகள் மெடிக்கல் படிப்பதற்கு தயார் செய்துவிட்டதாகவும் சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 2 நாளுக்கு, முன்பே தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக, காவல் துறையில் இல்லாத நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

 அவரும், டி ஐ ஜியும்  ஆனைகட்டிக்கு போவதாக திட்டமிடப்பட்டு, நண்பர் வரவில்லை என்பதால் போக முடியவில்லை. அவர் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவே அதாவது பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போது தனது தனிப்பாதுகாவலரிடம் துப்பாக்கி எல்லாம் எங்கே வைப்பீங்க, பத்திரமாக இருக்கிறதா என கேட்டு பார்த்துள்ளார். இடத்தை சென்று பார்த்துள்ளார். 

பின்னர் மறுநாள் காலையில் அங்கு சென்று துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
_________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe