RTI பரபரப்பு!!!!! சென்னை டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஓபனிங் செலவு ரூ.2 கோடியா???

published 1 year ago

RTI பரபரப்பு!!!!! சென்னை டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஓபனிங் செலவு ரூ.2 கோடியா???

கோவை : வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அடுத்தடுத்து செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 25 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் சென்னைக்கு மட்டும் இரண்டு சேவைகள் கிடைத்துள்ளன. அவை, சென்னை டூ மைசூரு மற்றும் சென்னை டூ கோவை ஆகியவை ஆகும்.

அடுத்தகட்டமாக 28 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரவுள்ளன. இதுதவிர வந்தே மெட்ரோ என்ற பெயரில் குறுகிய தூரப் பயணங்களுக்கு ரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை டூ திருப்பதி வழித்தடம் இருப்பது தான் ஹைலைட். இந்நிலையில் பரபரப்பான ஒரு தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதாவது, அஜய் போஸ் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதற்கு கிடைத்த பதிலில், சென்னையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க வருகை புரிந்தார். இதற்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக 1,14,42,108 ரூபாய் செலவாகியிருக்கிறது. இதில் 1,05,03,624 ரூபாய் எவோக் மீடியா என்ற நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இவர்கள் தான் நிகழ்ச்சிக்கான முழு முதல் ஏற்பாட்டை செய்தனர். இதேபோல் திருவனந்தபுரம் டூ காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்வை மைத்ரி அட்வர்டைசிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டது.

இந்த நிகழ்விலும் பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதற்காக மேற்குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 1,48,18,259 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் சேர்த்து மொத்தமாக பார்த்தால் 2.62 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. அதேசமயம் பெங்களூரு வழியாக செல்லும் சென்னை டூ மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க நிகழ்விற்கான செலவு குறித்து தெற்கு ரயில்வே எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது செலவு தான். எதற்காக தொடக்க நிகழ்விற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர் என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.

அப்படி இருக்கும் போது ஏன் வீணடிக்கின்றனர் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பதிலளித்த தெற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் குகநேசன் கூறுகையில், நிகழ்ச்சி ஏற்பாடு என்பது பல்வேறு செயல்பாடுகளின் தொகுப்பு என்பதை மறந்துவிட வேண்டாம்.

ரயில் நிலையத்தை அழகுப்படுத்துதல், தூய்மைப்படுத்துதல், நிகழ்ச்சிக்கான பிரிண்டிங் பொருட்கள், விளம்பரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இவற்றுக்காக தான் செலவு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe