நீதிமன்ற அழைப்பாணையை ஏற்க மாட்டோம்- மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தபெதிக மனு.

published 1 year ago

நீதிமன்ற அழைப்பாணையை ஏற்க மாட்டோம்- மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தபெதிக மனு.

கோவை : 2022ம் ஆண்டு ரயில்வே அலுவலக தேர்வுக்கு தமிழ்நாட்டில் விண்ணப்பித்த தமிழக இளைஞர்களுக்கு வட மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதனை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு திராவிட அமைப்புகள் தமிழ்நாட்டிலேயே தமிழ் இளைஞர்களுக்கு தேர்வு மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தை மேற்கொண்டனர். 

அதேபோல் காசி தமிழ் சங்கமத்திற்கு இலவச ரயில் விடப்படும் பொழுதும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கோவையிலிருந்து ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கோவையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அப்போது ஆர்ப்பாட்டம் நடத்திய இரண்டிற்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 
அச்சமயம் ஆர்ப்பாட்டத்திற்கு வாய்மொழியாக கோவை காவல்துறை அனுமதி அளித்ததாகவும், ஆனால் தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை வந்துள்ளதை ஏற்க மாட்டோம் என கூறியும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் சிறைக்கு செல்லவும்  தயாராக இருக்கிறோம் எனக் கூறி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினர் மனு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe