டி.ஐ.ஜி தற்கொலை விவகாரம்… யுடியூபர்களை வறுத்தெடுக்கும் கோவை போலீசார்..!

published 1 year ago

டி.ஐ.ஜி தற்கொலை விவகாரம்… யுடியூபர்களை வறுத்தெடுக்கும் கோவை போலீசார்..!

கோவை: கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக பேசு தமிழா பேசு youtube சேனல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜெகதீசன் மற்றும்  கீர்த்திவாசன் ஆகிய இருவரிடம் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக எட்டு பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி கோவை ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் சம்மன் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் பேசு தமிழா பேசு யூடியூப் சேனல் உரிமையாளரான ராஜவேலு மற்றும் அந்த சேனலில் பேட்டி அளித்திருந்த மற்றொரு youtubeரான வராகி ஆகியோர் நேற்று ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், நங்கநல்லூரை சேர்ந்த கிரண் ஹரிவரதன் ஆகிய இரண்டு பேருக்கு இன்று காவல் நிலையத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவ்விருவரும் இன்று காவல் நிலையத்தில் ஆஜர் ஆகினர். அவர்களிடம் உதவி ஆணையர் கரிகாலன் பாரிசங்கர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

குறிப்பாக  டிஐஜி விஜயகுமார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை யூட்யூப் வாயிலாக எந்த அடிப்படையில் பதிவிட்டீர்கள்? என்னவிதமான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது? போன்ற கேள்விகள் அவ்விருவரிடமும் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe