நாடாளுமன்ற தேர்தல் : கோவையில் ஒரு மாதம் சுருக்க முறை திருத்தம்

published 1 year ago

நாடாளுமன்ற தேர்தல் : கோவையில் ஒரு மாதம் சுருக்க முறை திருத்தம்

கோவை: நாடாளுமன்ற தேர்தல்- 2024க்காக சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் கோவையில் ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கோவை மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்கு நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டத்தில் 2023 ஜனவரி 5ம் தேதியில் வெளியிடப்பட்ட. இறுதி வாக்காளர் பட்டியலின்படி 14 லட்சத்து 98 ஆயிரத்து 721 ஆண்கள் 15 லட்சத்து 51 ஆயிரத்து 421 பெண்கள் மற்றும் இதரர் 558 பேர் என. மொத்தம் 30 லட்சத்து 50 ஆயிரத்து 700 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி எதிர்வரும் 2024க்காக சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் வருகின்ற 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21 வரையிலான காலத்தில் கோவையில் உள்ள 3069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவர்களது பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியினை BLO App version 4.4 மூலமாக பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எனவும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களை முழுமையாக சரிபார்த்திடவும், திருத்தங்கள் இருப்பின் மாற்றம் செய்திடவும் புதிய செயலில் வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புதிதாக வக்காளர்களின் விவரங்களை புதிய செயலி மூலமாக விண்ணப்பம் செய்திடவும், இணைவழி விண்ணப்பங்கள் மற்றும் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட வினானாப்பங்களை கள சரிபார்ப்பு செய்து, அங்கீகரிக்கவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது

மேலும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் ஆகிவற்றை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe