இல்லத்தரசிகளே கவனம்.. ஒவ்வொரு முறையும் போது சிலிண்டர் வாங்கும் போது ABCD என்ற குறியீட்டை கவனித்துள்ளீர்களா..?

published 1 year ago

இல்லத்தரசிகளே கவனம்.. ஒவ்வொரு முறையும் போது சிலிண்டர் வாங்கும் போது ABCD என்ற குறியீட்டை கவனித்துள்ளீர்களா..?

சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுவாக நாம் சிலிண்டர் வாங்கும் பொழுது, கைப்பிடியின் உள்பக்கத்தில் A-13, B-11, C 15 போன்ற குறியீடுகள் இருக்கும்.

இதை நம்மில் பெரும்பாலோர் கவனத்திற்கு மாட்டார்கள். ஆனால் இந்த குறியீடில் ஒளிந்துள்ளது சிலிண்டரின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் அர்த்தம்.


இத்தகைய குறியீடுகளை வைத்து சிலிண்டர் பழையதா? புதியதா? பரிசோதனைக்கு எப்போது உட்படுத்தப்பட்டது? அல்லது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா இல்லையா? என்ற விவரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்

பொதுவாக, ஒரு சிலிண்டர் 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த 15 ஆண்டு கால இடைவெளியில் சிலிண்டர் பலமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிண்டரில் அழுத்தத்தின் அளவை அதிகரித்து பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது சிலிண்டர் அதே நிலைத்தன்மையுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்து வருகின்றனர்.

இந்த உயர் அழுத்த பரிசோதனையில் சிலிண்டர் தேர்ச்சி பெற்றால், அதற்கு ஆண்டு மற்றும் மாதத்தை குறியீடாக வைத்து கொடுக்கின்றனர்.

உதாரணமாக ஒரு சிலிண்டர் ஜனவரி மாதம் 2011 ஆம் வருடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்றால் அந்த சிலிண்டரில் A11 என்று குறிப்பிடப்படுகிறது.

இதில் A என்பது ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தை குறிக்கிறது. 11 என்பது 2011ம் ஆண்டை குறிக்கிறது.

இங்கு ABCD என்ற எழுத்துகளை வைத்து மாதங்களை பிரிக்கின்றனர்.

A- ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை குறிக்கும்.

B- ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை குறிக்கும்.

C- ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை குறிக்கும்.

D- அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குறிக்கும்.

அதன் பின் வருகின்ற என் அந்தந்த வருடத்தை குறிக்கும். இது போன்று சிலிண்டர்கள் வருவதை பார்த்து அந்த சமையல் எரிவாயு டெஸ்ட்க்கு சென்று வந்ததா இல்லை அப்படி செல்லவில்லை என்றால் அதனை குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்கும் போது இதனை சரியாக உள்ளதா என்று சரி பார்த்து வாங்க வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில் டெஸ்ட் செய்யாத சிலிண்டரை உபயோகப்படுத்தினால் ஏதேனும் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்க்க அனைத்தையும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

இந்த விவரம் பயனுள்ளதாக இருந்தால் உடனடியாக உங்களது நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe