கோவையில் தேர்தல் பணிகள் தொடக்கம்..! ம.நீ.ம கட்சி நிர்வாகிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் தேர்தல் பணிகள் தொடக்கம்..! ம.நீ.ம கட்சி நிர்வாகிகள் அறிவிப்பு

கோவை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், வரும் தேர்தலில் கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட்ட கோவை தெற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினர் மக்களிடம் நேரில் பேசி அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் "மக்களோடு மய்யம்" என்ற திட்டத்தை ம.நீ.ம கட்சியினர் கையில் எடுத்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் மக்களே நேரில் சந்தித்து குறைகள் மற்றும் தேவைகளை கேட்டு அறிந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதியாக அளிக்க மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேலு எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் கோவை தொகுதியில் நடிகர் கமலஹாசன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் கமலஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe